திருப்பத்தூர் ெரயில் நிலையத்தில் டபுள் ெடக்கர், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல ஏற்பாடு
திருப்பத்தூர் ெரயில் நிலையத்தில் டபுள் ெடக்கர் மற்றும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ெரயில்வே பொது மேலாளர் மல்லையா தெரிவித்தார்.
திருப்பத்தூர் ெரயில் நிலையத்தில் டபுள் ெடக்கர் மற்றும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ெரயில்வே பொது மேலாளர் மல்லையா தெரிவித்தார்.
தொடக்க விழா
திருப்பத்தூர் ெரயில் நிலையத்தில் 5 கே.வி.சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு பிளாட்பாரங்களில் உள்ள மின்விளக்குகளுக்கு பயன்படுத்தும் வகையில் ரூ.3 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிலைய வேளாளர் அலுவலக அறை, நவீன கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவைகளை ஆய்ரு செய்யும்பணி நேற்று நடந்தது.
இதற்காக தென்னக ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா தனி ரெயில் மூலம்திருப்பத்தூர் வந்தார். அவர் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரத்தகை பயன்படுத்தும் திட்டத்தை தொடங்கிவைத்து, கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து ஆய்வு செய்தார். அப்போது அரசுபள்ளி மாணவிகளுடன் உரையாடினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
120 கிலோமீட்டர் வேகம்
திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட பின் திருப்பத்தூர் ெரயில் நிலையத்தை தென்னக ரயில்வே நவீனப்படுத்தியுள்ளது. ரூ.3 லட்சம் செலவில் மேற்கூறையில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு அனைத்து அறைகள் மற்றும் பிளாட்பாரங்களில் உள்ள மின் விளக்குகள், மின் விசிறிகளுக்கு பயன்படுத்தப்படும். தற்போது மூன்றாவது காமன் கிராஸ் ஓவர் உடன் கூடிய தண்டவாளம் மற்றும் பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரவு நேரங்களில் வரும் சரக்கு ெரயில் நிறுத்தப்பட்டு, பயணிகள் ெரயில்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியும்.
மேலும் 75 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த ெரயில்கள் தற்போது சென்னை முதல் திருப்பத்தூர் வழியாக கேரளா மாநிலம் பாலக்காடு வரை 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். திருப்பத்தூரில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்து இல்லாமல் ெரயில்களை இயக்க முடியும்.
நின்று செல்ல ஏற்பாடு
கோவை, பெங்களூரு டபுள் ெடக்கர், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயில் உள்ளிட்ட பெங்களூரு வரை செல்லும் ெரயில்கள் திருப்பத்தூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏலகிரி எக்ஸ்பிரஸ் மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. திருவனந்தபுரம், சென்னை ெரயில், கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை- அரக்கோணம் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருப்பத்தூரில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நல்லதம்பி எம்.எல்.ஏ., சேலம் கோட்ட மேலாளர் சீனிவாஸ், முதன்மை கண்காணிப்பு கோட்ட பொறியாளர் ரீனா, ஸ்டேஷன் மாஸ்டர் அஜித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
திருப்பத்தூர் ஜங்ஷன் ரெயில் பயணிகள் சங்க தலைவர் தமிழரசு, செயலாளர் ஈஸ்வர், பொருளாளர் கோபால், திருப்பத்தூர் ரெயில் பயணிகள் சேவை சங்க தலைவர் கமல்கான், செயலாளர் முத்துமண காவலன், ரோட்டரி, அரிமா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.