மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆற்றுப் பாலம் பராமரிப்பில்லாமல் புதர் மண்டிக் கிடப்பதால் பாழாகி வருகிறது.

மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆற்றுப் பாலம் பராமரிப்பில்லாமல் புதர் மண்டிக் கிடப்பதால் பாழாகி வருகிறது.

Update: 2022-11-27 16:40 GMT

போடிப்பட்டி

மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆற்றுப் பாலம் பராமரிப்பில்லாமல் புதர் மண்டிக் கிடப்பதால் பாழாகி வருகிறது.

உயர் மட்டப் பாலம்

கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே உயர் மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது.திருப்பூர் திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பகுதியாகவும் இந்த பாலம் உள்ளது.தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த பாலம் முறையாக பராமரிக்கப்படாததால் புதர் மண்டிக் கிடக்கிறது. பாலத்தின் மீதும் பக்கவாட்டுப் பகுதிகளிலும் மரம் மற்றும் செடிகள் முளைத்துக் கிடப்பதால் பாலம் பலமிழக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

அமராவதி ஆற்றின் குறுக்கே இருந்த பழைய பாலத்தை அகற்றி விட்டு இந்த பாலம் கட்டப்பட்டு 37 ஆண்டுகள் ஆகிறது. கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் கேரளா மாநிலத்தின் பல பகுதிகளை இணைக்கும் சாலையாக இது உள்ளது. இதனால் தினசரி ஏராளமான கனரக வாகனங்கள் இந்த பாலத்தைக் கடந்து செல்கின்றன.ஆனால் பாலம் முறையாக பராமரிக்கப்படாததால் உறுதித்தன்மை இழந்து வருகிறது.

பராமரிப்பில் அலட்சியம்

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இந்த பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இந்த பாலம் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. பெரிய அளவிலான பராமரிப்புக்கு லட்சக்கணக்கில் நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் சில ஆயிரங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய பராமரிப்புப்பணிகளை மேற்கொள்வதிலேயே அலட்சியம் காட்டப்படுகிறது. பாலத்தின் இருபுறமும் மண் குவியலாக உள்ளது. இதனால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் பாலத்தில் தேங்குகிறது. அத்துடன் மண் குவியலில் செடிகள் மற்றும் மரங்கள் முளைத்து காணப்படுகிறது.அத்துடன் பாலத்தின் பக்கவாட்டில் பெரிய அளவிலான மரங்கள் முளைத்துள்ளது. இவற்றின் வேர்கள் பாலத்தினுள் ஊடுருவும்போது விரிசல் ஏற்படுகிறது.

அந்த விரிசலின் வழியாக மழைநீர் ஊடுருவிச் சென்று பாலத்தின் உறுதித்தன்மைக்கு முற்றிலுமாக வேட்டு வைக்கும் அபாயம் உள்ளது.மேலும் பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதை சேதமடைந்துள்ளதால் அந்த வழியாக நடந்து செல்பவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி விடுகிறது. அத்துடன் பாலத்தின் இருபுறமுள்ள கரைகளில் உலோகத்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பை ஒட்டி பலவிதமான மரங்கள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது.இதனால் தடுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள பிரதிபலிப்பான்கள் முற்றிலுமாக மறைக்கப்பட்டுள்ளது. இது இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்குக் காரணமாக மாறி விடும்.மேலும் இதிலுள்ள முட்டச்செடிகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி காயமடையும் நிலை ஏற்படுகிறது.எனவே பாலம் பராமரிப்பில் அலட்சியம் காட்டாமல் அவளை நிலையிலிருக்கும் பாலத்தை தொடர்ச்சியாக பராமரித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்