மன்னார்குடி தாலுகாவில் இருந்து பிரிக்க கூடாது

களப்பால், குறிச்சிமூலை, வெங்கத்தான்குடி ஊராட்சிகளை மன்னார்குடி தாலுகாவில் இருந்து பிரிக்க கூடாது என்று ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-31 19:00 GMT

கோட்டூர்;

களப்பால், குறிச்சிமூலை, வெங்கத்தான்குடி ஊராட்சிகளை மன்னார்குடி தாலுகாவில் இருந்து பிரிக்க கூடாது என்று ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து குறிச்சிமூலை ஊராட்சி தலைவர் அறிவுடைநம்பி, களப்பால் ஊராட்சி தலைவர் சுஜாதா பாஸ்கரன், வெங்கத்தான்குடி ஊராட்சி தலைவர் திலகவதிசிவசுப்பிரமணியன் ஆகியோர் கலெக்டருக்கு அனிப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மன்னார்குடி தாலுகா

முத்துப்பேட்டை தனி தாலுகா அறிவிப்பை தமிழக முதல்-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக நடைமுறைபடுத்தி தொடங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. ஏற்கனவே களப்பால் மேல்நிலைப்பள்ளியில் தாலுகா குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் குறிச்சிமூலை, களப்பால், வெங்கத்தான்குடி ஆகிய ஊராட்சிகளை முத்துப்பேட்டையோடு இணைக்கை கூடாது. அப்படி மன்னார்குடியில் இருந்து பிரிக்க நினைத்தால் திருத்துறைப்பூண்டி தாலுகாவோடு இணைக்க வேண்டும். மேலும் களப்பாைல மையமாக வைத்து தனி வருவாய் சரகத்தை உருவாக்க வேண்டும் என எங்கள் கருத்தை பதிவு செய்தோம்.இதைத்தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் இதே கருத்தை வலியுறுத்தினோம். அப்போது அதிகாரிகள் எங்களின் கருத்தை ஏற்பதாக கூறினார்கள்.

கருத்து கேட்பு கூட்டம்

இந்த நிலையில் வருகிற 6-ந் தேதி தாலுகா அறிவிப்பை நடைமுறை படுத்துவது என்றால் மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி களப்பால், குறிச்சிமூலை, வெங்கத்தான்குடி ஊராட்சிகளை மன்னார்குடி தாலு காவிலேயே தொடர செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மேற்கண்ட ஊராட்சிகளை திருத்துறைப்பூண்டி தாலுகாவோடு இணைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்