தொண்டி பேரூராட்சி கூட்டம்

தொண்டி பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-10-20 00:15 IST

தொண்டி, 

தொண்டி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலி கான் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் அழகு ராணி ராஜேந்திரன், செயல் அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொண்டி பேரூராட்சி 12-வது வார்டு, மீனவர் காலனி, மகாசக்திபுரம், தர்கா கால் மாட்டு தெரு பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்வது. தொண்டி பேரூராட்சி 10-வது வார்டு, மேலத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், பேரூராட்சி பகுதியில் அனுமதி இல்லாமல் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. வரும் காலங்களில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பேரூராட்சியில் முறையான அனுமதி பெற்ற பின்னரே பொதுக்கூட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மணிமுத்தாற்றில் இரண்டு பக்கங்களிலும் கரை அமைத்து மழைநீர் தடை இன்றி செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிக்கு அடிப்படை பிரச்சினைகள் குறித்து கோரிக்கைகள் விடுத்து பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்