சமயபுரம் பாதயாத்திரை குழு சார்பில் அன்னதானம்
சமயபுரம் பாதயாத்திரை குழு சார்பில் அன்னதானம் நடைபெற்றது.;
திருமயம்
திருமயம் சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் விரதமிருந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி பாதயாத்திரையாக நடந்து சென்று அம்மனை தரிசித்து வருகின்றனர். அதேபோன்று இந்த ஆண்டும் பாதயாத்திரை செல்ல உள்ளதால் நேற்று முன்தினம் பாதயாத்திரை குழுவின் சார்பாக சிவன் கோவில் முன்பாக கொட்டகை அமைத்து பல ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இதில் திருமயத்தை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருவரங்குளத்தில் சமயபுரம் பாதயாத்திரை குழு பக்தர்கள் சார்பில், ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து பெரியநாயகி அம்பாள் கோவில் உடனுறை அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கருப்பசாமி மண்டபத்தில் சமயபுரம் மாரியம்மனை எழுந்தருள செய்தனர். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.