போத்தி விநாயகர் கோவிலில் அன்னதானம்

தூத்துக்குடி போத்தி விநாயகர் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.;

Update: 2023-09-18 19:00 GMT

தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தி விநாயகருக்கு வருசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவில் கோவில் தர்மகர்த்தா ராஜா பெரியசாமி, செயலாளர்கள் செல்வராஜ், செல்வக்குமார், பொருளாளர் வேல்சாமி, கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்