நாட்டுக்கோழி வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்
நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மத்திய அரசின் உயிர் தொழில் நுட்பவியல் துறை திட்டத்தின்கீழ் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் சார்பில் திருப்புல்லாணி அருகே மொங்கான்வலசை மற்றும் கொளுந்துறை கிராமங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சுதீப்குமார் விளக்கி கூறினார். ராமநாதபுரம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மைய தலைவர் விஜயலிங்கம் நாட்டுக்கோழி வளர்ப்பில் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளை எடுத்து கூறினார். திட்ட பணியாளர் நவீன் நன்றி கூறினார்.