தினமும் யோகா செய்தால் உடல்நலம், மனநலத்தை பாதுகாக்க முடியும்'-மாவட்ட நீதிபதி பேச்சு

தினமும் யோகா செய்தால் உடல்நலம், மனநலத்தை பாதுகாக்க முடியும் என்று மாவட்ட நீதிபதி கூறினார்.

Update: 2022-06-21 18:23 GMT

சிவகங்கை,

தினமும் யோகா செய்தால் உடல்நலம், மனநலத்தை பாதுகாக்க முடியும் என்று மாவட்ட நீதிபதி கூறினார்.

சர்வதேச யோகா தினம்

நாடு முழுவதும் நேற்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவின்படியும், மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா பயிற்சி நேற்று நடைபெற்றது. இந்த யோகா பயிற்சியை முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

மனிதனுக்கு உடல் நலம், மனநலம் அளித்து, அமைதி, அன்பு ஆகியவற்றை வழங்குவது யோகா பயிற்சி ஆகும். மேலும் தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் நோயின்றி வாழ யோகா உதவுகிறது.எனவே அனைவரும் தினமும் யோகா பயிற்சியை மேற்கொண்டு உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதுகாத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் மற்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுடன் சேர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

கலந்து கொண்டவர்கள்

யோகா பயிற்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துகுமரன், போக்ேசா நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இவர்களுக்கு சிவகங்கை மனவளக்கலை மன்றத்தின் சார்பில் சண்முகநாதன், மகேஸ்வரன், ராமராஜ், தினகரன், உதயசங்கர், பாண்டியம்மாள் ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்