மானை கடித்துக் கொன்ற நாய்கள்
ஆலங்குளம் அருகே மானை நாய்கள் கடித்துக் கொன்றன.;
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஒக்கநின்றான் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள வயல்வெளி முட்புதரில் சுமார் 5 வயதுடைய புள்ளிமான் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மானை பார்வையிட்டனர்.
அப்போது, வனப்பகுதியில் இருந்து வந்த மானை நாய்கள் கடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் மானை வனப்பகுதியில் புதைத்தனர்.