ஆடுகளை கடித்து குதறும் நாய்கள்

நன்னிலம் அருகே ஆடுகளை கடித்து குதறும் நாய்களை பிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-30 18:45 GMT

நன்னிலம்;

நன்னிலம் அருகே ஆடுகளை கடித்து குதறும் நாய்களை பிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெருநாய்கள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தெருக்கள் தோறும் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் இந்த நாய்கள் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் இந்த வழியாக செல்லும் மக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்தி கடிக்கிறது. இதில் சில நாய்கள் இந்த பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள், மற்றும் கோழிகளை கடித்து உயிரிழக்க வைக்கிறது. இதனால் ஆடு மற்றும் கோழி வளர்ப்போர் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து உள்ளனர்.

4 ஆடுகள் சாவு

இந்தநிலையில் நேற்று அதிகாலை நன்னிலம் அருகே உள்ள சோத்தக்குடி கிராமத்தில் மணிமாறன் என்பவர் வளர்த்து வந்த 5 ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்திரிந்த 5-க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து குதறின. இதில் 4 ஆடுகள் உயிரிழந்தன. இதனால் மணிமாறன் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது வாழ்வாதாரமே ஆடுகள் வளர்ப்பு தான். தற்போது எனது 4 ஆடுகளை நாய்கள் கடித்து கொன்றுள்ளன. எனவே நாய்களை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையடன் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்