கிணற்றில் தவறி விழுந்த நாய் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு
சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த நாய் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு;
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள ஆதிதிருவரங்கத்தை சேர்ந்த முருகன் மனைவி கவுசல்யா. இவரது வளர்ப்பு நாய் ஒன்று கடந்த 4-ந் தேதி அவரது வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் இல்லாத 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. நாயை காணாமல் தேடி அலைந்த கவுசல்யா சந்தேகத்தின் பேரில் கிணற்றை பார்த்தபோது அங்கே அவரது செல்லப்பிராணி வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. பின்னர் இது குறித்து சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் கயிறு மூலம் நாயை உயிருடன் மீட்டனர்.