டாக்டர் மனைவி தற்கொலை
தூக்குப்போட்டு டாக்டர் மனைவி தற்கொலை செய்து கொண்டார்;
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை அருகே உள்ள பெரியார் நகரை சோ்ந்தவர் ஸ்டாலின். பல் டாக்டர். இவருடைய மனைவி மோகனபிரியா (வயது 32). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்தநிலையில் சம்பவத்தன்று மோகனபிாியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் மோகனபிரியாவின் சகோதரர் பார்த்திபன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, மோகனபிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோகனபிரியாவிற்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் தஞ்சை உதவி கலெக்டர் ரஞ்சித் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.