சிவகாசியில் டாக்டர்கள் வேலை நிறுத்தம்
சிவகாசியில் டாக்டரை அாிவாளால் வெட்டிய சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
சிவகாசியில் டாக்டரை அாிவாளால் வெட்டிய சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரிவாள் வெட்டு
சிவகாசி பி.எஸ்.ஆர். ரோட்டில் ஆஸ்பத்திரி நடத்தி வருபவர் டாக்டர் ஜெயபால் (வயது 67). இவரது ஆஸ்பத்திரிக்கு கடந்த 19-ந் தேதி இரவு ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்த சகோதரர்கள் பாண்டியராஜன் (41), கருப்பசாமி (32) ஆகியோர் வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் டாக்டர் ஜெயபால் இருந்த அறைக்கு சென்று அவரிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி உள்ளனர்.
வேலை நிறுத்தம்
இந்த நிலையில் டாக்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவத்தை கண்டித்து இந்திய மருத்துவ சங்கத்தின் சிவகாசி கிளை சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக சிவகாசியில் உள்ள 120 தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தங்கள் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை.
இதற்கிடையில் இந்திய மருத்துவ சங்கத்தின் சிவகாசி கிளை நிர்வாகிகள் சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, ஆர்.டி.ஓ, கலெக்டர் ஆகியோரிடம் டாக்டர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க கோரியும், டாக்டர் ஜெயபாலை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும் மனு கொடுத்தனர்.