'கொரோனா காலத்தில் மருத்துவரின் சேவை அளப்பரியது'-டீன் ரேவதி பாலன் பேச்சு

‘கொரோனா காலத்தில் மருத்துவரின் சேவை அளப்பரியது’ என்று டீன் ரேவதி பாலன் பேசினார்.;

Update: 2023-07-23 19:20 GMT

இந்திய மருத்துவ சங்கம் நெல்லையின் சார்பில் டாக்டர்கள் தின விழா நேற்று நடந்தது. நெல்லையில் நடந்த விழாவுக்கு சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் முகமதுஇப்ராகிம், பொருளாளர் பிரபுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருஉருவாகாதற்கான அடிப்படை நோயறிதல் மற்றும் மேலாண்மை குறித்து டாக்டர் தேவமணி பாண்டியன், தடுப்பூசிகளின் தற்போதைய புள்ளி விவரங்கள் குறித்து டாக்டர் ராஜேஷ், ஏம்சின் தற்போதைய நிலை குறித்து டாக்டர் பன்னீர்செல்வம் எடுத்து கூறினார்கள்.

நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதிபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டாக்டர்களுக்கு கேடயம் பரிசு வழங்கி பேசினார்.

அவர் பேசுகையில், மருத்துவ பணி என்பது தலைசிறந்த பணியாகும். இந்த பணியை நாம் நல்ல முறையில் சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறோம். டாக்டர் ராயின் பிறந்தநாளை டாக்டர்கள் தினமாக கொண்டாடி வருகிறோம். கொரோனா காலத்தில் மருத்துவர்கள் செய்த பணியானது அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டக்கூடிய அளப்பரிய பணியாகும். தங்களுடைய உயிரை துச்சம் என மதித்து டாக்டர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றினார்கள். இதனால் மருத்துவத்துறைக்கு ஒரு பெரும் புகழ் கிடைத்தது என்றார்.

விழாவில் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் சுரேஷ்துரை, ஓய்வு பெற்ற டீன் கண்ணன், டாக்டர்கள் ராமசுப்பிரமணியன், அன்புராஜன், அருணாசலம், சண்முகம், கந்தசாமி, ஆவுடையப்பன், அன்புராஜன், சிசி செல்வன், சந்திரகலா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நெல்லை மருத்துவக்கல்லூரி மாணவர்களின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

Tags:    

மேலும் செய்திகள்