2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க டாக்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்

2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க டாக்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்

Update: 2023-03-26 19:31 GMT

காசநோய் ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தி 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க அனைத்து டாக்டர்களும் உறுதி ஏற்க வேண்டும் என்று தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறினார்.

காசநோய் தினம்

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் நுரையீரல் மருத்துவத்துறை, பொது மருத்துவத்துறை, மாவட்ட காசநோய் மருத்துவத்துறை ஆகியவை இணைந்து உலக காசநோய் தின நிகழ்ச்சியை நடத்தின. இந்த நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஆறுமுகம், மருத்துவத்துறை பேராசிரியர்கள் சுந்தரராஜன், வெற்றிவேல், மருத்துவத்துறை பதிவாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுரையீரல் பிரிவு துறைத் துலைவர் டாக்டர் அன்பானந்தன் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், காச நோய் சிகிச்சையில் மத்திய, மாநில அரசுகள் நிர்ணயித்த இலக்கான 75 சதவீதம் நோய் கண்டறிதல், 85 சதவீதம் குணப்படுத்தலை அடைய வேண்டும். இதற்காக தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தை அனைத்து டாக்டர்களும் செயல்படுத்தி, பிரதமரின் அறிவுறுத்தலின் படி 2025-ம் ஆண்டுக்குள், காசநோயை தஞ்சை டெல்டா மாவட்டங்கள் மட்டுமன்றி, இந்தியாவை விட்டு ஒழிக்க உறுதிமொழி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்ப்பு மருந்துகள்

இதில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட காசநோய் துணை இயக்குனர்கள் டாக்டர்கள் சாவித்திரி, மாதவி, புகழ் ஆகியோர் கலந்து கொண்டு காசநோய் கண்டறிதல், காசநோய் எதிர்ப்பு மருந்துகள் அறிவிப்பு சட்டம் மற்றும் இணை நோயினால் ஏற்படும் விளைவுகள் குறித்துபேசினர்.

இதில் துணை நிலைய டாக்டர் கவுதமன், நோய்க்குறியியல் துறைத்தலைவர் சாந்தி, அனைத்து துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மாணவர்கள், பாரா மெடிக்கல் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நுரையீரல் பிரிவு உதவி பேராசிரியர் நடேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்