போலீஸ் கமிஷனரிடம் தி.மு.க.வினர் மனு
நெல்லை போலீஸ் கமிஷனரிடம் தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.;
நெல்லை தச்சநல்லூர் பகுதி தி.மு.க செயலாளர் தச்சை சுப்பிரமணியன், மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அருள்மணி ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமாரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை வி.எம்.சத்திரம் நான்கு வழிச்சாலையில் உள்ள பாலத்தில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் உருவ பொம்மையை நேற்று தூக்கில் கட்டி தொங்க விட்டுள்ளனர். இது ஆ.ராசாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த செயலை செய்தவர்களை கண்டுபிடித்து குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
அப்போது வக்கீல் பாலா, பழவூர் கணபதி, சுத்தமல்லி அர்ஜூன பாண்டியன், 18-வது வார்டு வட்ட செயலாளர் வேல்முருகன், தொப்பி மைதீன், கார்டன் சேகர், பால் கட்டளை முருகன், அழகு, துரை மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.