கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணித்த மேயர்....திமுகவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை

திமுகவின் போலி கதைகள் மீண்டும் வெளிப்பட்டுள்ளது என புகைப்படங்களை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2022-12-11 11:17 GMT

சென்னை,

சென்னை காசிமேடு பகுதியில் மாண்டஸ் புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து முதல் அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பின்னர், அங்கிருந்து புறப்பட்டபோது அவரது கான்வாய் வாகனத்தில் மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் தொங்கியபடி பயணம் செய்தனர்.

இந்நிலையில் மேயர் ப்ரியா கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்த விவகாரம் குறித்து அண்ணாமலை திமுகவை விமர்சித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்

"சுய மரியாதை, சமூகநீதி, மற்றும் சாமானியர்களின் கட்சி என்ற திமுகவின் போலி கதைகள் மீண்டும் வெளிப்பட்டுள்ளது" என புகைப்படங்களை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்