போலீஸ் சூப்பிரண்டிடம் தி.மு.க.வினர் புகார் மனு

பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.

Update: 2022-07-05 19:16 GMT

தி.மு.க. அரசை கண்டித்து புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் பா.ஜ.க. வினர் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பா.ஜ.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் உண்ணாவிரதம் நடந்து கொண்டுள்ள பந்தலில் அறந்தாங்கி தி.மு.க.வை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் தி.மு.க.விலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தனர். அப்போது அவரது காரின் முன் பகுதியில் பறக்க விடப்பட்டிருந்த தி.மு.க. கொடியை பா.ஜ.க.வினர் கழற்றிவிட்டு அவர்களது கொடியை கட்டினர். அதன் பிறகு காரில் இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை அகற்றிவிட்டு மோடியின் படத்தை வைத்தனர். இந்த நிலையில் தி.மு.க. நிர்வாகிகள் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. கொடியை பா.ஜ.க.வினர் அவமரியாதை செய்து கொடியை கீழே போட்டு மிதித்ததாகவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் படத்தை கீழே போட்டு காலில் மிதித்ததாகவும் கூறி பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புகார் தெரிவித்திருந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்