தி.மு.க. பிரமுகர் அலுவலக கண்ணாடியை உடைத்தவர் கைது
கள்ளக்குறிச்சியில் தி.மு.க. பிரமுகர் அலுவலக கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் மணி (வயது 42). தி.மு.க.பிரமுகரான இவர் அண்ணா நகரில் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரின் அலுவலக கதவு கண்ணாடி மற்றும் மீட்டர் பெட்டியை 2 பேர் அடித்து உடைத்தனர். இதை தட்டிக்கேட்ட மணியை அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து மணி அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தி.மு.க. பிரமுகர் அலுவலக கண்ணாடியை உடைத்தது ஏமப்பேரைசேர்ந்த அய்யப்பன் (38), ராமச்சந்திரா நகரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (40) ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து அய்யப்பனை போலீசார் கைது செய்தனர். மேலும்.கிருஷ்ணகுமாரை தேடி வருகின்றனர்.