தி.மு.க. பிரமுகர் வீட்டை பா.ஜ.க.வினர் முற்றுகை
தி.மு.க. பிரமுகர் வீட்டை பா.ஜ.க.வினர் முற்றுைகயிட்டனர்.;
ராஜபாளையம்
ராஜபாளையம் சுரைக்காய்பட்டி தெருவில் வசித்து வருபவர் ஜெயராஜ். தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர். இவர் தனது முகநூல் பக்கத்தில் முத்துராமலிங்க தேவரின் படத்தை நடிகர் படம் போல் சித்தரித்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த பா.ஜ.க. நிர்வாகிகள் ஜெயராஜ் வீட்டை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, புகார் அளிக்குமாறு கூறியதன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் பா.ஜ.க.வினர் ஜெயராஜ் மீது போலீசில் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.