குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க அமைச்சரிடம் தி.மு.க.வினர் கோரிக்கை

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க அமைச்சரிடம் தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-10-12 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் மற்றும் தி.மு.க.வினர், தமிழக மீன்வளம் மினவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலலட்சம் பக்தர்கள் வருகை தர உள்ளனர். இந்த பக்தர்களின் வசதிக்காக திருவிழாவின் முக்கிய நாட்களான வருகிற 22, 23,24.25 ஆகிய தேதிகளிலும், பக்தர்கள் திரும்பிச் செல்வதற்கு வசதியாக 26, 27, 28, ஆகிய தேதிகளிலும் சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி பகுதிக்கு சிறப்பு அரசு பஸ்களை மதுரை, தூத்துக்குடி. நெல்லை வழியாக இயக்க வேண்டும், என தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கலந்து பேசி மேற்கண்ட நகரங்களில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்