தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட கழக அலுவலகம் முன்பு நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கி பொங்கலிட்டு, அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கினார். விழாவில் தனுஷ் குமார் எம்.பி., தென்காசி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, ஒன்றிய செயலாளர் சீனித்துரை, மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பானு ஷமீம், கூட்டுறவு பண்டகசாலை முன்னாள் தலைவர் ஷமீம் இப்ராகிம், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.