தி.மு.க. வர்ணம் பூசியதை அகற்றக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

தி.மு.க. வர்ணம் பூசியதை அகற்றக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-06-03 18:42 GMT

கரூர் மாநகர கிழக்கு பகுதி அ.தி.மு.க. நகர துணை செயலாளர் குணசேகரன் என்பவர் நேற்று கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் 16-வது வார்டு பகுதியில் அ.தி.மு.க. கொடி கம்பம் மற்றும் அதை தாங்குவதற்கான கொடி பீடம் ஆகியவைகள் அமைக்கப்பட்டு கட்சியின் பல்வேறு நிகழ்ச்சியின்போது கொடியேற்றியும், நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கொடிகம்பம் எங்களால் அகற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

கொடி பீடமானது எங்களுடைய பராமரிப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் அ.தி.மு.க. கொடி கம்பம் தாங்குவதற்கான கொடி பீடத்தில் தி.மு.க.வை சேர்ந்த சிலர், தி.மு.க.வின் வர்ணத்தை பூசிவிட்டனர். மேலும் தி.மு.க. கொடி கம்பம் ஒன்றையும் அதில் நட்டுவைத்து, கொடியேற்றவும், பேனர் ஒன்றையும் வைத்துவிட்டனர். இதற்கு அ.தி.மு.க.வினர் ஆட்சேபணை செய்ததால் கொடி ஏற்றவில்லை. தற்போது கொடி கம்பத்தையும் அகற்றிவிட்டனர். ஆனால் கொடி பீடத்தில் தி.மு.க. வர்ணத்தை இன்னும் அகற்றவில்லை. எனவே கொடி பீடத்தில் உள்ள தி.மு.க. வர்ணத்தை அகற்றுவதற்கு தி.மு.க.வை சேர்ந்தவருக்கு அறிவுறுத்தல் வழங்கியும், மேலும் இதுபோன்று செயல்படாமல் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்