தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளர் கோரிக்கை மனு
அமைச்சர் கே.என்.நேருவிடம் தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளர் கோரிக்கை மனு அளித்தனர்
கடையநல்லூர்:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ.பத்மநாபன் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சிகளில், பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு நிதி வேண்டி சென்னையில் அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஜெகதீசன், பேரூராட்சி தலைவர் ராஜன், அரசு ஒப்பந்தக்காரர் சண்முகவேல், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற துணைச் செயலாளர் அருணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.