கருணாநிதி உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் அஞ்சலி

கருணாநிதி உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்;

Update: 2023-08-07 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சிங்கம்புணரி அண்ணா மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து, சோமசுந்தரம், நகர செயலாளர் கதிர்வேல், நகர அவை தலைவர் சிவக்குமார், பேரூராட்சி மன்ற துணை தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் தலைமையில் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அண்ணா மன்றத்தில் இருந்து திருப்பத்தூர் சாலை வழியாக பஸ் நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு வந்தடைந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் சிவபுரி சேகர், முத்துக்குமார், ஷீலா சொக்கநாதன், துணை நகர செயலாளர் அலாவுதீன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், தனுஷ்கோடி, பூமிநாதன், பிரான்மலை ஞானசேகரன், மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர்கள் புகழேந்தி, சூரக்குடி சிவசுப்பிரமணியன், மாவட்ட தொழிலாளர் அணி துணை தலைவர் ஞானி செந்தில், நகர இளைஞரணி அருண் பிரசாத், ஒன்றிய இளைஞரணி மனோகரன், தொழில்நுட்ப பிரிவு மாடன் சையது, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கதிர்காமம், பேரூராட்சி கவுன்சிலர் மணி சேகரன், கிருங்காகோட்டை கண்ணன், பிரான்மலை வனக்குழு தலைவர் செந்தில்குமார், அழகுராஜ், பொன் சரவணன், பரிச்சி சரவணன், பிரேம்குமார், தொண்டரணி துரைச்சாமி, சொக்கலிங்கம், கார்த்திகேயன், பேச்சாளர் உதயகுமார், அமுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்