தி.மு.க. ஊராட்சி துணைத்தலைவர் சிகிச்சை பலனின்றி சாவு

கும்பகோணம் அருகே கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்த தி.மு.க. ஊராட்சி துணைத்தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-22 21:16 GMT

கும்பகோணம், ஏப்.23-

கும்பகோணம் அருகே கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்த தி.மு.க. ஊராட்சி துணைத்தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊராட்சி துணைத்தலைவர்

தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 65). தி.மு.க.வை சேர்ந்த இவர், பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இருந்து வந்தார்.

ராஜேந்திரனுக்கும், அவரது உறவினர் குமார்(40) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு ராஜேந்திரன் பட்டீஸ்வரம் கடைத்தெரு பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

கத்திக்குத்து

அப்போது அங்கு வந்த குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேந்திரனை கழுத்து மற்றும் முகத்தில் குத்திவிட்டு தப்பியோடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இதற்கிடையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்