தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி.கனிமொழி நோட்டீஸ்

திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்ட விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி.கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Update: 2023-04-29 07:55 GMT

சென்னை,

திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோ வெளியிட்டார்.

இதனை முற்றிலும், மறுத்த திமுக, அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் இந்த நோட்டீசை அனுப்பி இருந்தார். அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் உதயநிதி மற்றும் திமுக எம்.பி டி.ஆர்.பாலு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்ட விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி.கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், அடிப்படை ஆதாரம் இன்றி அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அவர் நோட்டீசை பார்த்த 48 மணிநேரத்திற்குள் அவதூறு வீடியோவை உடனடியாக நீக்கவேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறும் பட்சத்தில் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கனிமொழி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்