ரெயில்வே மந்திரிக்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு கடிதம்
ரெயில் சேவையில் தனியாரை ஈடுபடுத்தும் முடிவை கைவிட வலியுறுத்தி ரெயில்வே மந்திரிக்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
கோவை - ஷீரடி இடையிலான பாரத் கவுரவ் விரைவு ரெயில் சேவையில் தனியாரை ஈடுபடுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி ரெயில்வே மந்திரிக்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கோவையிலிருந்து ஷீரடிக்கு தொடங்கப்பட்டுள்ள தனியார் ரெயில் சேவை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இது பொதுமக்களின் நீண்ட கால நலனுக்கும் பொதுத்துறைக்கும் எதிரானது என்றும் கூறினார்.
மேலும் தொழில் துறை மற்றும் புனித யாத்திரை மையங்களை இணைக்க இந்த ரெயில் சேவை முக்கியமானது என்றாலும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரெயில்வேஸ் தனியாரில் ஈடுபடுத்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் வேண்டுமென்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.