தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

பாவூர்சத்திரத்தில் தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2022-11-24 18:45 GMT

பாவூர்சத்திரம்:

தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட நகரம், ஒன்றியம், பேரூர், கிளை கழகங்களில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், கட்சி பொறுப்பாளர்களிடம் புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். கடையம் பெரும்பத்து ஊராட்சி பகுதியை சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகளை தி.மு.க. நிர்வாகி பரமசிவன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்