தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
அம்பையில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
அம்பை:
அம்பை நகராட்சி 14-வது வார்டு சமுதாய நலக்கூடத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன், நகராட்சி கவுன்சிலர் சவுராபானு செய்யதுஅலி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் உமாமகேஸ்வரன், வார்டு செயலாளர் சுதாகர், நகர இளைஞரணி தினகர், கார்த்திக், சரவணன் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.