தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

மாவட்டம் முழுவதும் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

Update: 2023-04-03 17:37 GMT

உறுப்பினர் சேர்க்கை முகாம்

தமிழகம் முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க தி.மு.க. தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தி.மு.க.வினர் புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் பழனி தேரடி பகுதியில் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர செயலாளர் வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி துணை செயலாளர் வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முகாமில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசும்போது, தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்குமான ஆட்சியை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொடுத்து வருகிறது. கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் முழுவீச்சில் நடக்கிறது என்றார். நிகழ்ச்சியில் பழனி பகுதியை சேர்ந்த பலர் தி.மு.க.வில் இணைந்து உறுப்பினர் அட்டை பெற்று கொண்டனர். இதேபோல் ஆயக்குடியிலும் தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகர் வடக்கு

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகர் வடக்கு பகுதி தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் திண்டுக்கல் ராமநாதபுரத்தில் நேற்று நடந்தது. முகாமுக்கு மாநகர செயலாளரும், துணை மேயருமான ராஜப்பா தலைமை தாங்கினார். வடக்கு பகுதி செயலாளர் ஜானகிராமன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் நேருபாண்டியன், மாவட்ட துணை செயலாளர்கள் பிலால் உசேன், நாகராஜன், மேயர் இளமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.

அதையடுத்து புதிய உறுப்பினர்களுக்கான படிவங்கள் வழங்கப்பட்டன. முகாமில், மாநகர பொருளாளர் சரவணன், மாநகர தலைவர் முகமது, துணை செயலாளர் அழகர்சாமி, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் அமிர்தகடேஸ்வரர், கவுன்சிலர்கள் சுவாதி, இந்திராணி, சரண்யா, கிருபாகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அக்பர், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், விவசாய அணி நிர்வாகி கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சாணார்பட்டி வடக்கு, தெற்கு தி.மு.க.

சாணார்பட்டி வடக்கு, தெற்கு ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் கோபால்பட்டியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொருளாளர் க.விஜயன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணை செயலாளர் சுந்தரராஜன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நத்தம் தொகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோபால்பட்டி பஸ் நிறுத்தத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் சேர்க்கை படிவத்தில் கையெழுத்திட்டு தங்களை தி.மு.க. வில் புதிய உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். முகாமில் தலைமை கழக பொறுப்பாளர் ஜெயக்குமார், திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம், மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹரிஹரசுதன், நத்தம் பேரூராட்சி தலைவர் பாட்ஷா, சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர்கள் ராமதாஸ், பார்வதி, காளியப்பன், வீராச்சாமி, மனோகரன், பராசக்தி, ஒன்றிய பொருளாளர்கள் ஜான்பீட்டர், வீரக்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க.

வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் 16 ஆயிரம் பேரை புதிய உறுப்பினர்களாக சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.

வேடசந்தூர் பாரதிநகரில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாமில் காந்திராஜன் எம்.எல்.ஏ., தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீரா எஸ்.டி. சாமிநாதன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் நாச்சிமுத்து, வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கினர்.

இதில் தெற்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் வெங்கடசாமி, பேரூர் தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன், வேடசந்தூர் பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளர் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றிய அவைத்தலைவர் ஆரோன், பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன் உள்பட பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் வடக்கு ஒன்றியம்

திண்டுக்கல் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடி என்.எஸ்.நகரில் நடந்தது. இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் நேரு பாண்டியன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர்கள் நாகராஜன், பிலால்உசேன், ஒன்றியக்குழு தலைவர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சூசை ராபர்ட், திண்டுக்கல் சட்டமன்ற தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் குமரேசன், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் கதிரேசன், கவுன்சிலர் வெங்கடேசன், ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் சூர்யா மற்றும் திண்டுக்கல் ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்