தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம்
சாத்தான்குளம் மணிநகரில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் மத்திய ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் மணிநகரில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காலேப் ஆபிரகாம் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஞானதாஸ், கண்ணன் ராஜகிருபாகரன், கார்த்திகேசபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன்முருகேசன் வரவேற்றார். இதில் தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட பிரதிநிதி அலெக்ஸ் பிரிட்டோ, மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், கிளை செயலாளர் அல்பர்ட், தெற்கு மாவட்ட மகளிரணி தலைவி சோமசுந்தரி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர் கண்ணன், மத்திய ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் பிரதீபா, ஒன்றிய துணை செயலாளர்கள் யோராஜ், தங்கேஸ்வரி, சுடலைக்கண், மாவட்ட பிரதிநிதி அன்னகணேசன், லெட்சுமண சுபாஷ், இளைஞரணி கிளை செயலாளர்கள் ஆபேஸ், கிறிஸ்டோபர், ராஜேஷ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பசுபதி நன்றி கூறினார்.