தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

வள்ளியூரில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.;

Update: 2022-11-13 19:19 GMT

வள்ளியூர் (தெற்கு):

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் கூட்டம் வள்ளியூர் எம்.எஸ். மஹாலில் நடைபெற்றது. தொகுதியியில் உள்ள 306 வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காெணாலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசினார்.

இதில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா, நெல்லை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் நம்பி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்