தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

நெல்லையில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.

Update: 2022-11-12 19:57 GMT

தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் 234 தொகுதிகளிலும் நேற்று நடந்தது. இதில் சென்னையிலிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் வேலு என்ற சுப்பையா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, கவுன்சிலர் சுதா மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்