தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டதி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார்.;

Update: 2023-09-11 19:19 GMT

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பால்னாங்குப்பம் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் தலைமை தாங்கினார். சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது வேலூர் மாவட்டத்தில் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழாவிற்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்து, அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, நகர செயலாளர் ம.அன்பழகன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாநில, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றியக் குழு தலைவர்கள், நகர மன்ற தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்