தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

Update: 2023-08-18 17:04 GMT


நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய பா.ஜனதா அரசையும், அதற்கு துணை போகும் தமிழக கவர்னரை கண்டித்து, தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதுதொடர்பாக திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், மண்டல தலைவர் கோவிந்தசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் ரெயில் நிலையம் முன் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்