தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

பட்டுக்கோட்டையில் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.;

Update: 2023-08-27 19:15 GMT

பட்டுக்கோட்டையில் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பொற்கிழி வழங்கும் விழா

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பட்டுக்கோட்டை கோமள விலாஸ் திருமண மண்டபத்தில் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ. வரவேற்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. முன்னோடிகள் 650 பேருக்கு கருணாநிதி உருவம் பொறித்த ஷீல்டு, டாலர், தி.மு.க. கரை வேட்டி, பொற்கிழி ஆகியவற்றை வழங்கினார்.

வெள்ளி வாள்- கேடயம்

அப்போது தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி வாளும், கேடயமும் வழங்கப்பட்டது. விழாவில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி. கே.ஜி.நீலமேகம், அசோக்குமார், மாநில தணிக்கை குழு உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சிவகுமார், நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆதி ராஜேஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அருள்நம்பி, சூரப்பள்ளம் கிளை செயலாளர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்