"திராவிட மாடல் எனக்கூறி மக்களை ஏமாற்றும் தி.மு.க.வினர்"

தமிழகத்தில் பல்வேறு வரிகளை உயர்த்தி விட்டு திராவிட மாடல் எனக்கூறி மக்களை தி.மு.க.வினர் ஏமாற்றுகின்றனர்.

Update: 2023-03-14 19:00 GMT

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பழனியை அடுத்த ஆயக்குடியில் நடந்தது. இதற்கு பேரூர் செயலாளர் சசிக்குமார் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தேர்தலின்போது தி.மு.க.வினர் பல்வேறு பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றனர். அந்த வாக்குறுதிகள் எதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. இதேபோல் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த பல்வேறு நல்ல திட்டங்களை எல்லாம் தி.மு.க. ஆட்சியில் முடக்கி விட்டனர். இவையில்லாமல் பல்வேறு வரிகளை உயர்த்தி உள்ளனர். திராவிட மாடல் எனக்கூறி, மக்களை தி.மு.க.வினர் ஏமாற்றி வருகின்றனர். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு பதிவு செய்ததற்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிப்பது உறுதியாகி விட்டது என்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குப்புசாமி, வேணுகோபாலு, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, மாரியப்பன், சட்டமன்ற தொகுதி நிர்வாகி ரவிமனோகரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் அன்வர்தீன், மீனவரணி செயலாளர் மகுடீஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்