தி.மு.க. இளைஞர் அணி பொறுப்புகளுக்கான நேர்காணல்

திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி பொறுப்புகளுக்கான நேர்காணலை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, டாக்டர் எ.வ.,வே.கம்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.;

Update: 2023-10-04 17:27 GMT

திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி பொறுப்புகளுக்கான நேர்காணலை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருவண்ணாமலை வேங்கிகாலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் தி.மு.க.இளைஞரணி பொறுப்புகளுக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.என்.அண்ணாதுரை தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவ அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு நேர்காணலை தொடங்கி வைத்து வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ.உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இளைஞரணி பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவரிடம் தனித்தனியாக நேர்காணல் நடைபெற்றது. மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் ஜோயல், பிரபு, கஜேந்திரன், இன்பாரகு, கு.பி.ராஜா, அப்துல் மாலிக், இளையராஜா, பிரகாஷ், சீனிவாசன், ஆனந்தகுமார் ஆகியோர் நேர்காணலை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்தனர்.

இது குறித்து சி.என்.அண்ணாதுரை எம்.பி. கூறுகையில், ''தி.மு.க.இளைஞர் அணி மாநில செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரையின்படி இந்த நேர்காணல் நடைபெறுகிறது மண்டலம் 3-ல் இளைஞரணி பொறுப்புகளுக்கு மொத்தம் 1,100 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த நேர்காணலில் கலந்து கொண்டுள்ளனர். இயக்கத்தில் பணியாற்ற ஆர்வம் உடைய வயது மற்றும் தகுதி உடைய இளைஞர்களை பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளிப்படையாக இந்த நேர்காணல் நடைபெறுகிறது'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்