தி.மு.க. ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

கடையநல்லூர் தி.மு.க. ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

Update: 2022-11-05 18:45 GMT

கடையநல்லூர்:

தென்காசி தெற்கு மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கடையநல்லூர் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் மா.செல்லத்துரை தலைமை தாங்கினார். கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேக்தாவூது, பூ.ஆறுமுகச்சாமி, பொருளாளர் ஷெரீப், பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.சாமித்துரை, மு.தமிழ்ச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர் க.கனிமொழி, கடையநல்லூர் நகராட்சி தலைவர் ஹபீப்ரஹ்மான், கடையநல்லூர் ஒன்றியகுழு துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாமன் கடையநல்லூர் ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர்மன்ற கவுன்சிலர் முகைதீன் கனி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்