தி.மு.க. தொழிற்சங்க புதிய கட்டிட திறப்பு விழா

விக்கிரமசிங்கபுரத்தில் தி.மு.க. தொழிற்சங்க புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது.;

Update: 2022-10-05 20:15 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் தி.மு.க. தொழிற்சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஞானதிரவியம் எம்.பி. முன்னிலை வகித்தார். முன்னதாக அம்பை ஒன்றிய செயலாளரும், மதுரா கோட்ஸ் தொழிற்சங்க செயலாளருமான பரணிசேகர் தலைமையில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், நகர செயலாளர் கணேசன், அவைத்தலைவர் அதியமான், நகராட்சி தலைவர் செல்வசுரேஷ் பெருமாள், சிவந்திபுரம் ஊராட்சி தலைவர் ஜெகன், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்