ராமநாதபுரத்தில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு வாபஸ் பெற கோரி ராமநாதபுரத்தில் தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2022-10-15 18:45 GMT

இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு வாபஸ் பெற கோரி ராமநாதபுரத்தில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அரண்மனை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் முருகேசன் எம்.எல்.ஏ., இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் இன்பா ரகு, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, நகராட்சி தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் யூனியன் தலைவர் பிரபாகரன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்தும், ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்