புதுக்கோட்டையில் தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் நியமனம்
புதுக்கோட்டையில் தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
தே.மு.தி.க.வில் உட்கட்சி அமைப்பு தேர்தல் நடந்து முடிந்த நிலையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் புதிதாக நியமனம் செய்து அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி, வடக்கு மாவட்ட செயலாளராக கார்த்திகேயன், அவை தலைவராக புஷ்பராஜ், பொருளாளராக வினாயகமூர்த்தி, துணை செயலாளர்களாக துரைராஜ், முகமதுநிஜார், கோவிந்தராஜ், பாக்கியலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர்களாக செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்களாக வெங்கடாச்சலம், விமல், துரைராஜ், பழனிவேல், கோவிந்தராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு அளித்து கட்சியை வளர்ச்சியடைய பாடுபடவேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.