சங்கரன்கோவில் கிளை சிறையில் அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் குறை கேட்பு

சங்கரன்கோவில் கிளை சிறையில் அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் குறைகளை கேட்டறிந்தனர்.;

Update: 2022-12-17 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கிளை சிறையில் தி.மு.க. சட்டப்பிரிவு துணை செயலாளர் கண்ணதாசன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், சிறை கட்டிடம் பழமையாக இருப்பதால் கட்டிடத்தை மாற்றி கூடுதல் அறைகள் கட்டித்தரவும், சமையல் கூடம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவும் சட்டத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட துணை செயலாளர் புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி சரவணன், மூத்த உறுப்பினர் சந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்