ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைத்து விட்டது திமுக அரசு; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தி.மு.க. அரசு, ஒப்பந்தகாரர்களிடம் 20 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள் என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2022-09-29 15:42 GMT

மதுரை,

மதுரை மாவட்ட அ.தி.மு.க. சார்பாக பழங்காநத்ததில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் தமிழ்கத்தில் நிலைமை அப்படி தான் இருக்கிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 16 மாதங்கள் ஆகி விட்டது. அதில் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்து இருக்கிறது என்பதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நான் அவதூறு பேச வில்லை. உண்மை நிலையை சொல்லுகிறேன். தி.மு.க.வுக்கு வாக்களித்த மக்கள், இப்போது வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். மக்கள் மட்டுமல்ல, தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என்ற சொல்ல தொடங்கி விட்டனர்.

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது. தி.மு.க. தேர்தலின் போது பல வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டது. அ.தி.மு.க.வை ஊழல் செய்தது என்று சொல்லுவதற்கு தி.மு.க.விற்கு எந்த தகுதியும் கிடையாது. தி.மு.க அரசு ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைத்து விட்டது. சொத்து வரி, மின்கட்டணம் என வரியை உயர்த்தி 2 போனஸ்களை மக்களுக்கு தந்து உள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்