தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்

தென்காசியில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.;

Update: 2023-01-08 18:45 GMT

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் குத்துக்கல் வலசை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம். பி., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து சிறப்பாக பணியாற்றி சட்டமன்ற தேர்தலில் பெரிய மாற்றத்தை உருவாக்கி இளைஞர் படையை நடத்தி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பது, தேர்தல் வாக்குறுதியில் கட்சியின் தலைவர் கூறியபடி தென்காசியில் மருத்துவக் கல்லூரி மற்றும் வேளாண்மை கல்லூரி இந்த ஆண்டே அமைக்க முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்வது, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தலைமைக் கழகம் பெயரில் இடம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அடிக்கல் நாட்டியும், மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தென்காசி மாவட்டத்திற்கு அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்