தி.மு.க. பொதுக்கூட்டம்

ராதாபுரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.;

Update: 2023-04-15 21:03 GMT

வள்ளியூர் (தெற்கு):

ராதாபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட அவைத்தலைவர் ம.கிரகாம்பெல், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜான்ரூபா கிங்ஸ்டன், ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மி.ஜோசப்பெல்சி வரவேற்றார். கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்புரையாற்றி 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பாளையங்கோட்டை தெற்கு கே.எஸ்.தங்கபாண்டியன், நாங்குநேரி கிழக்கு ஆரோக்கிய எட்வின், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சாந்தி சுயம்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்