தி.மு.க. பொதுக்கூட்டம்

கடையம் அருகே தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-03-17 18:45 GMT

கடையம்:

கடையம் தெற்கு ஒன்றியம் ஆழ்வார்குறிச்சி பேரூர் தி.மு.க. சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாஙகினார். பேரூர் அவைத்தலைவர் அல்லாபிச்சை, துணை செயலாளர்கள் பாண்டியன், சகுந்தலா, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் அழகேசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக நாஞ்சில் சம்பத், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், துணை செயலாளர் தமிழ்செல்வன், குற்றாலம் பேரூர் செயலாளர் குட்டி, வீட்டு வசதி வாரிய தலைவர் சுரேஷ், பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா பரமசிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்