தி.மு.க. பொதுக்கூட்டம்

பாளையங்கோட்டையில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது

Update: 2022-11-24 21:20 GMT

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக்கழக வக்கீல் சூரியா வெற்றிகொண்டான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணை செயலாளரும், மகளிர் தொண்டர் அணி மாநில துணை செயலாளருமான விஜிலா சத்யானந்த், பொதுக்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மாநகர துணை செயலாளர் மூளிக்குளம் பிரபு, பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், பேரூர் செயலாளர் வில்சன் மணித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்