தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க.மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-24 18:45 GMT


மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக அழைத்துச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இதனை தடுக்கத்தவறிய மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் துரைதாகபிள்ளை, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் பாப்பாத்தி நடராஜன், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி தாகபிள்ளை, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் அன்பு அன்பரசு வரவேற்றார். இதில் வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன் ராஜவேல், வசந்தவேல்முருகன், டேனியல் சந்திரசேகரன், வக்கீல் பால அண்ணாமலை, மாவட்ட இளைஞரணி ஆறுகதிரவன், அவை தலைவர்கள் தர்மலிங்கம், ரவி, ஒன்றிய பொருளாளர் செல்வம், ஒன்றிய நிர்வாகிகள் சிங்காரவேலு, இளங்கோவன், முனுசாமி, பன்னீர்செல்வம், அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் தனவேல், சாந்திகணேசன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் பாட்ஷாபி, கிளியம்மாள், ஐஸ்வர்யா, மாவட்ட நிர்வாகிகள் பெரோஸ்கான், நீதிபதி, செங்குட்டுவன் உள்பட சார்பு அணி நிர்வாகிகள், மகளிர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மாவட்ட தி.மு.க.மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அஸ்வினி செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி தலைவி சுகன்யா நாராயணசாமி, மாவட்ட மகளிர் தொண்டரணி தலைவி தனலட்சுமி கோவிந்தன், துணை அமைப்பாளர் ராஜகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பாளர் ராதிகா சக்கரபாணி வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் கலந்து கொண்டு மணிப்பூரில் நடந்த கலவரம் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்தும், இதனை தடுக்க தவறிய பா.ஜ.க.அரசை கண்டித்தும் பேசினார். இதில் மகளிர் தொண்டரணி துணை தலைவி செந்தாமரை, துணை அமைப்பளர் சுமதி, நிர்வாகி விமலா, மகளிரணி துணை தலைவி மாரியம்மாள் பொன்னுசாமி, துணை அமைப்பாளர்கள் மகாதேவி, கொளஞ்சி மற்றும் நிர்வாகிகள் ஷீலா, தவமணி, சந்தியா உள்பட 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்